நியூயார்க்:
பெப்சி நிறுவன தலைமை அதிகாரியும்
இந்தியருமான இந்திரா நூயி சம்பளம்
6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கு அவர்
ஸி87.2 கோடி பெற்றார். சென்னையில்
பிறந்த இந்திரா நூயி, பெப்சிகோ
நிறுவனத்தின் சர்வதேச தலைமை அதிகாரியாக
இருக்கிறார். 2011ம் ஆண்டுக்கு நூயி
சம்பளம் மற்றும் படிகள், பங்கு
ஒதுக்கீடாக மொத்தம் ரூ87.2 கோடி
பெற்றுள்ளார். அதில் அடிப்படை சம்பளம்
ரூ8.16 கோடி. இது 2006ம்
ஆண்டு முதல் 2010 வரை ரூ6.6 கோடியாக
இருந்தது. 2011ல் அவருக்கு சுமார்
ரூ1.5 கோடி சம்பள உயர்வு
அளிக்கப்பட்டது. ரூ48.5 கோடிக்கு நூயி
பெப்சி நிறுவன பங்கு ஒதுக்கீடு
பெற்றுள்ளார். ஊக்கத் தொகையாக 2011ம்
ஆண்டுக்கு ஸி12.5 கோடி தரப்பட்டுள்ளது.
ஓய்வூதிய பலனாக 2011ல் ரூ15.3 கோடி
தரப்பட்டது. மொத்தம் சேர்த்து 2010ம்
ஆண்டை விட 2011ல் இந்திரா
நூயி சம்பளம் 5.8 சதவீதம் அதிகரித்தது. 2011ம்
ஆண்டில் பெப்சி நிறுவனம் நஷ்டம்
அடைந்தும் நூயி சம்பளம் உயர்ந்தது
குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
இந்த ஆண்டின் 2009-ல் உலகின் மிகச்
சிறந்த தலைமை செயல் அதிகாரியாக
(சிஇஓ) சென்னையைச் சேர்ந்தவரும் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான
இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின்
"க்ளோபல் சப்ளை செய்ன் லீடர்ஸ்
குரூப்" நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிறுவனங்களின் தலைமை
செயல் அதிகாரிகளுக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச அங்கீகாரம் இந்த விருது என்பது
குறிப்பிடத்தக்கது.
மாறிவரும்
சுற்றுச் சூழல் மற்றும் கால
நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பெப்ஸிகோ நிறுவனத்தின்
உற்பத்தி நடவடிக்கைகளை மாற்றிய பெருமைக்குரியவர் நூயி
என்றும், பெப்ஸிகோவின் வர்த்தக நடவடிக்கைகளை குளிர்பான
தயாரிப்புகளையும் தாண்டி விரிவடைய வைத்தவர்
என்றும் இந்த விருது அறிவிப்புக்கு
விளக்கமும் தந்ததுள்ளது "க்ளோபல் சப்ளை செய்ன்
லீடர்ஸ் குரூப்".
"இந்த
விருது தனக்கு கிடைத்திருப்பது பெப்ஸி
நிறுவனத்துக்கு கிடைத்ததற்குச் சமம். என்னுடன் பணியாற்றும்
198000 பணியாளர்களுக்கும் கிடைத்துள்ள கவுரமே இது", என்று
இந்திரா நூயி கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment