இனடர்நெட்
உலகில் இப்போதைய ஹாட் டாப்பிக் மரிஸா
மேயர் தான். கூகுளின் துணை
தலைவராக பணி புரிந்த இவரை
யாஹூ நிறுவனம் முதன்மை செயல் அதிகாரியாக
நியமித்துள்ளது.
இது மட்டும் ஹாட் நியூஸ்
அல்ல, பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி
ஒரு செய்தி வெளியானது. கூகுள்
நிறுவனத்தின் ஆசியா-பசிஃபிக் ஆப்பரேஷன்
மேனேஜிங் டைரக்டரான சைலேஷ் ராவ், டிவிட்டரில்
இணைகிறார் என்ற செய்தி தான்
அது.
இதை தொடர்ந்து 5 மாதம் கால இடைவெளி
கழித்து கூகுள் நிறுவனத்தில் 13-ஆண்டு
காலமாக பணி புரிந்த மரியா
மேயர் யாஹூவில் இணைந்துள்ளார்.
இப்படி
கூகுளில் பெரிய பதவியில் பல
ஆண்டு காலமாக பணி புரிந்தவர்கள்
வேறு நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். கூகுளில்
ஆசியா-பசிஃபிக் ஆப்பரேஷன் மேனேஜிங் டைரக்டரான சைலேஷ் ராவ், ட்விட்டரில்
இணைந்ததற்கு கூகுள் தனது வாழ்த்துக்களையும்
தெரிவித்திருந்தது.
இருப்பினும்,
உயர் பதவியில் இருப்பவர்கள் அடுத்தடுத்து வேறு நிறுவனங்களுக்கு தாவி
வருவது கூகுளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி
இருப்பதாக தெரிகிறது.
இப்போது
மரியா மேயர், யாஹூவில் தலைவராக
இணைந்துள்ளார். இதற்கு கூகுள் இன்னும்
எந்த விதமான பதிலையும் தெரிவிக்கவில்லை.
இப்படி அடுத்து அடுத்து கூகுளின்
உயர் அதிகாரிகள் வேறு பதவியில் இணைவதற்கு
என்ன காரணம்? என்பது பற்றி
இன்னும் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
முதன்மை
செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பதை விட ஒரு
பெரிய சவாலை ஏற்றுள்ளார் மரிஸா
மேயர் என்று தான் சொல்ல
வேண்டும். கடந்த ஆண்டு மட்டும்
யாஹூ நிறுவனம் 22.7 கோடி (டாலர்) வருமானத்தை
ஈட்டியிருக்கிறது.
ஆனால் முந்தைய ஆண்டின் மதிப்பை
விட, கடந்த ஆண்டின் வருமானம்
4 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. யாஹூ நிறுவனம் புதிய
க்ளவுடு கம்ப்யூட்டிங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு
மையத்தினை சென்னை ஐஐடி சென்னையில்
துவங்கியது.
கூகுளுடன்
சம அளவில் போட்டி போட
யாஹூ நிறுவனம் புதிய புதிய யுக்திகளை
கையாண்டு வருகிறது என்றெல்லாம் பல பேச்சுக்கள் அடிபட்டு
வந்தது.
இப்போது
அந்த பேச்சுக்கள் இன்னும் வலுவடையும் வகையில்,
கூகுள் நிறுவனத்தில் 13-ஆண்டு காலமாக பணி
புரிந்து நிறுவனத்தை மேம்படுத்த பல வழிகளை உருவாக்கி,
கூகுளின் துணை தலைவராக பணி
புரிந்த மரியா மேயரை, யாஹூ
தனது முதன்மை செயல் அதிகாரியாக
நியமித்துள்ளது.
மரிஸா மேயர் யாஹூவில் புதிய
பதவியை மட்டும் ஏற்கவில்லை. கடந்த
ஆண்டை விட இப்போது 4 சதவிகிதம்
குறைவான வருமானத்தில் இருக்கும் யாஹூவை மேலே கொண்டு
வரும் புதிய சவாலையும் சேர்த்து
ஏற்றிருக்கிறார்.
No comments:
Post a Comment